ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை பள்ளிகளுக்கு கிடைக்க வில்லை என கூறப்படுகிறது. வாட்ஸப் மூலமாக வந்த அறிவிப்பின் அடிப்படையில் மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடங்கள் குறித்து ஆசிரியர்கள் விளக்கமளித்து வருவதாகவும், அதிலும் பாடநூலின் சில பக்கங்களை நீக்க தகவல் உள்ளதாகவும், குறிப்பிட்ட பாடம் என்பது பற்றி இல்லாததாலும் ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த முறையான சுற்றறிக்கையை பள்ளிக்கல்வி துறை வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கல் வெளியாகியுள்ளது.