சென்னையில் சலூன் கடைகள் திறக்க அனுமதியா? சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

Webdunia
வியாழன், 28 மே 2020 (13:19 IST)
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் நான்கு கட்டமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக தற்போது நடைபெற்று வரும் நான்காம் கட்ட ஊரடங்கு வர 31ம் தேதியுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த நான்காம் கட்ட ஊரடங்கில் டாஸ்மார்க் திறக்க அனுமதி, ஆட்டோக்கள் திறக்க அனுமதி உள்பட பல தளர்வுகள் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. ஆனால் இதில் எந்த தளர்வுகளும் சென்னைக்கு பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் சமீபத்தில் தமிழகம் முழுவதும் சலூன் கடைகளை திறக்க அனுமதி தந்த தமிழக அரசு சென்னையில் மட்டும் திறக்க அனுமதிக்கவில்லை 
 
இந்த நிலையில் இது குறித்து தமிழக முடிதிருத்துவோர் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது ’சென்னையில் கள் நிலவரத்துக்கு ஏற்ப சலூன் கடைகளை திறக்க அனுமதிக்க முடியும் என்று பதில் அளித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனையடுத்து இந்த வழக்கை ஜூன் 8ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஒத்திவைத்தனர். ஜூன் 8ஆம் தேதி பிறப்பிக்கப்படும் உத்தரவுக்கு பின்னரே சென்னையில் சலூன் கடைகள் திறக்க அனுமதிக்கப்படுமா என்பது குறித்த உத்தரவு வெளிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்