இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள்: தமிழக அரசின் சார்பில் மரியாதை!

Webdunia
புதன், 7 ஜூலை 2021 (20:38 IST)
இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், சென்னை, கிண்டி காந்திமண்டப வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இதுகுறித்து செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
இரட்டைமலை சீனிவாசன்‌ அவர்களின்‌ பிறந்தநாள்‌ அரசு விழாவாகக்‌ கொண்டாடப்படுகிறது. இரட்டைமலை சீனிவாசன்‌ அவர்களின்‌ பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசின்‌ சார்பில்‌, மாண்புமிகு அமைச்சர்‌ பெருமக்கள்‌, சென்னை, கிண்டி காந்தி மண்டப வளாகத்தில்‌ அமைந்துள்ள அன்னாரின்‌ மணிமண்டபத்தில்‌ அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப்படத்திற்கு இன்று (07.07.2021) மலர்‌ தூவி மரியாதை செலுத்தினார்கள்‌.
 
தமிழ்நாடு அரசு செய்தித்துறையின்‌ சார்பில்‌, தமிழ்ச்‌ சான்றோர்கள்‌, விடுதலைப்‌ போராட்ட தியாகிகள்‌ மற்றும்‌ தலைவர்கள்‌ ஆகியோரை பெருமைப்படுத்துகின்ற வகையில்‌, அன்னார்களது பிறந்தநாளன்று அரசின்‌ சார்பில்‌ ஆண்டுதோறும்‌ மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி, விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில்‌, இரட்டைமலை சீனிவாசன்‌ அவர்களின்‌ பிறந்த தினமான ஜூலை 7ஆம்‌ நாள்‌, ஒவ்வொரு ஆண்டும்‌ அரசு விழாவாகக்‌ கொண்டாடப்பட்டு வருகின்றது.
 
அதன்படி, இரட்டைமலை சீனிவாசன்‌ அவர்களின்‌ பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக அரசின்‌ சார்பில்‌, சென்னை, கிண்டி காந்தி மண்டப வளாகத்தில்‌ அமைந்துள்ள அன்னாரின்‌ மணிமண்டபத்தில்‌ அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப்‌ படத்திற்கு இன்று (07.07.2027 காலை 10.00 மணியளவில்‌ மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர்‌ திரு.மு.பெ.சாமிநாதன்‌ அவர்கள்‌, மாண்புமிகு ஆதி திராவிடர்‌ நலத்துறை அமைச்சர்‌ திருமதி.என்‌.கயல்விழி செல்வராஜ்‌ அவர்கள்‌, நாடாளுமன்ற உறுப்பினர்கள்‌ திருமதி.தமிழச்சி தங்கபாண்டியன்‌, திரு.தொல்‌.திருமாவளவன்‌, சட்டமன்ற உறுப்பினர்கள்‌ திருவாளர்கள்‌. இ.பரந்தாமன்‌, எம்‌.சிந்தனைச்செல்வன்‌, எஸ்‌.எஸ்‌.பாலாஜி மற்றும்‌ இரட்டைமலை சீனிவாசன்‌ அவர்களின்‌ குடும்பத்தினர்‌ ஆகியோர்‌ கலந்துகொண்டு மலர்‌ தூவி மரியாதை செலுத்தினார்கள்‌.
 
இந்நிகழ்ச்சியில்‌, தமிழ்வளர்ச்சி மற்றும்‌ செய்தித்துறை செயலாளர்‌ திரு.மகேசன்‌ காசிராஜன்‌, இ.ஆ.ப., செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை கூடுதல்‌ இயக்குநர்‌, இணை இயக்குநர்‌ உட்பட உயர்‌ அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்‌.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்