திமுக தனது தேர்தல் அறிக்கையில் பல்வேறு கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் 5 சவரன் வரை நகைக்கடன் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தது. அதன்படி ஆட்சிக்கு வந்ததும் 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தது.
இந்நிலையில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் 5 சவரன் வரை நகை கடன்களை தள்ளுபடி செய்து இன்று முதல் நகைகளை பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 5 சவரனுக்கு உட்பட்டு நகைக்கடன் பெற்ற 22.52 லட்சம் பேரில், 10.18 லட்சம் பேருக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதாக கூட்டுறவு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.