திமுக கூட்டணியில் தேமுதிக?

வியாழன், 21 பிப்ரவரி 2019 (12:01 IST)
அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் இணைந்துவிட்ட நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தேமுதிகவுடன் நடத்தி வரும் பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
 
தேமுதிகவுக்கு முதலில் இரண்டு தொகுதிகள் மட்டுமே அதிமுக கொடுக்க முன்வந்ததாகவும் தற்போது நான்கு தொகுதிகள் வரை கொடுக்க சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது
 
ஆனால் தேமுதிக தரப்பில் பத்து தொகுதிகளில் பிடிவாதமாக இருந்ததாகவும் குறைந்தபட்சம் பாமகவுக்கு கொடுத்த ஏழு தொகுதிகளாவது வேண்டும் என்று வலியுறுத்தியதால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை
 
இந்த நிலையில் தேமுதிகவுடன் கூட்டணி குறித்து பேச்சு நடத்தவில்லை, ஒருவேளை பேசினால் சொல்லி அனுப்புவோம் என்று நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேமுதிகவுக்கு மறைமுக அழைப்பு விடுக்கும் வகையில் கோடிட்டு காட்டினார்.
 
இதனையடுத்து சற்றுமுன் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் உடல்நலன் குறித்து விசாரிக்க அவரது இல்லத்திற்கு தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் சென்றுள்ளார். அவர் வெறும் உடல்நலன் மட்டுமே விசாரிப்பாரா? அல்லது திமுக கூட்டணியில் தேமுதிக இணைய பேச்சுவார்த்தை நடத்துவாரா? என்பதை இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்து கொள்ளலாம்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்