ஆனால் அதே நேரத்தில் 2014ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சியை திமுக சேர்த்து கொள்ளவில்லை. அந்த தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டது. திமுக சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 34 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் அந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளுமே அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது
எனவே காங்கிரஸ் இல்லாமல் திமுகவும், திமுக் இல்லாமல் காங்கிரசும் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறமுடியாது என்பது உறுதியானதால் இந்த முறை இரு கட்சிகளும் கூட்டணி அமைத்துள்ளது. எனவே 2009ஆம் ஆண்டு 8 தொகுதிகளில் வென்ற காங்கிரஸ் கட்சிக்கு இந்த முறை 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது லாபமாகவே கருதப்படுகிறது. அதேபோல் இம்முறை மதிமுக உள்பட ஒருசில கட்சிகள் திமுக கூட்டணியில் இணைந்துள்ளதால் திமுக் 30க்கும் குறைவான தொகுதிகளில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது