விஜய்யுடன் பேசியது என்ன? முதல்வர் பழனிசாமி விளக்கம்!

Webdunia
செவ்வாய், 29 டிசம்பர் 2020 (10:54 IST)
தளபதி விஜய் சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்தார் என்றும் மாஸ்டர் பட ரிலீஸ் குறித்து அவர் முதல்வரிடம் ஆலோசித்தார் என்றும் குறிப்பாக திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்ததாகவும் கூறப்பட்டது
 
இந்த நிலையில் நடிகர் விஜய்யுடன் ஏற்பட்ட சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு முதல்வர் பதிலளித்து உள்ளார். விஜய் சந்திப்பின்போது அவர் வைத்த கோரிக்கை என்ன என்று செய்தியாளர்கள் கேட்டபோது ’திரையரங்குகள் இன்னும் முழுமையாக திறக்கப்படவில்லை என்றும் அனைத்து திரையரங்குகளையும் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்ததாக முதல்வர் பழனிசாமி கூறினார் 
 
முதல்வரின் இந்த பதிலை அடுத்து விஜய் முதல்வர் சந்திப்பில் நடந்தது என்ன என்பது குறித்து தற்போது தெரிய வந்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்