தமிழக பாஜக தலைவரை அறிவிப்பதில் அப்படி என்ன சிக்கல்?

Webdunia
சனி, 18 ஜனவரி 2020 (12:30 IST)
பாஜ தேசிய தலைவர் பதவியேற்ற பின்னரே தமிழக பாஜக தலைவர் அறிவிக்கப்படுவார் என செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
தமிழக பாஜக தலைவராக இருந்தார் தமிழிசை சௌந்தரராஜன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தெலுங்கானா மாநில கவர்னராக பொறுப்பேற்றார். இதனை அடுத்து கடந்த சில மாதங்களாகவே தமிழக பாஜக தலைவர் இல்லாமல் இயங்கி வருகிறது. 
 
இந்நிலையில் இன்னும் இரண்டு தினங்களில் தமிழக பாஜக தலைவர் பதவிக்கான நபர் அறிவிக்கப்படும் என கூறியிருந்தன. தமிழக பாஜக தலைவர் பட்டியலில் ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன், பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் பெயர்கள் அடிப்பட்டன. ஆனால், சீனியர்கள் என்ற முறையில் பொன்னார் மற்றும் எச்.ராஜாவுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்பட்டது.  
 
ஆனால், இரண்டு நாட்கள் முடிந்தும் இன்னும் தமிழக பாஜக தலைவர் யார் என அறிவிக்காமல் உள்ளனர். இந்த அறிவிப்பில் அப்படி என்ன சிக்கல் இருக்கும் என எண்ணிய போது, தேசிய செயல் தலைவராக உள்ள ஜே.பி.நட்டா பாஜ தேசிய தலைவராக வரும் 20 ஆம் தேதி அறிவிக்கப்படுகிறார்.
 
அதனைதொடர்ந்து, 22 ஆம் தேதி அவர் பதவியேற்க உள்ளதாக கூறப்படுறது. எனவே இதெல்லாம் முடிந்த பின்னர்தான் தமிழக பாஜ தலைவர் யார் என்ற அறிவிப்பு வெளியாகும் என பாஜக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்