சூரப்பாவிற்கு எல்லா உரிமையும் இருக்கு... எல். முருகன் வக்காலத்து?

Webdunia
வெள்ளி, 16 அக்டோபர் 2020 (14:47 IST)
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், சூரப்பாவை சுதந்திரமாக செயல்படவிடாமல் தடுக்கின்றனர் என குற்றம்சாட்டியுள்ளார். 
 
அண்ணா பல்கலை.க்கு உயர் சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பாக சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என தமிழக அரசு முடிவெடுத்துள்ளது என அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல் வெளியிட்டுள்ளார்.  
 
அண்ணா பல்கலை.க்கு உயர் சிறப்பு அந்தஸ்து வழங்கினால் மாணவர்களுக்கான 69% இடஒதுக்கீடு கேள்விக்குறியாகும். அதேபோல உயர் சிறப்பு அந்தஸ்து வந்தால் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு, கூடுதல் கல்விக்கட்டணம் வர வாய்ப்பு நேரிடும். எனவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 
 
இந்நிலையில் இது குறித்து தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை சுதந்திரமாக செயல்படவிடாமல் தடுக்கின்றனர். துணைவேந்தரின் அதிகாரத்தில் தலையிட யாருக்கும் அதிகாரமில்லை. கடிதம் எழுத துணைவேந்தர் சூரப்பாவுக்கு என்ன அதிகாரம் உள்ளதோ அதை பயன்படுத்துகிறார்.  சிறப்பு அந்தஸ்து வழங்கினால் இடஒதுக்கீடு பாதிப்பு என சிலர் தவறாக பேசி வருகின்றனர் என காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்