முக ஸ்டாலினுக்கு திரையரங்க உரிமையாளர்கள் வாழ்த்து: திரையரங்குகள் திறக்கப்படுமா?

Webdunia
புதன், 5 மே 2021 (16:54 IST)
முக ஸ்டாலினுக்கு திரையரங்க உரிமையாளர்கள் வாழ்த்து: திரையரங்குகள் திறக்கப்படுமா?
வரும் 7ஆம் தேதி புதிய முதல்வராக பதவி ஏற்க இருக்கும் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களை திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் சந்தித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர் 
 
நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றதை அடுத்து நாளை மறுநாள் அதாவது மே 7ஆம் தேதி தமிழக முதலமைச்சராக முக ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்க உள்ளார் 
 
இந்த நிலையில் பல்வேறு தரப்பினர் முதல்வராக பதவி ஏற்க இருக்கும் ஸ்டாலினுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் சற்றுமுன்னர் முக ஸ்டாலின் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைகளில் வைரலாகி வருகிறது
 
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் புதிய முதல்வர் திரையரங்குகளை ஒரு சில நிபந்தனைகளுடன் திறக்க அனுமதிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்