பேருந்தில் இருந்து தவறி விழுந்த மாணவி பலி !

செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (16:53 IST)
அருப்புக்கோட்டை அருகே பேருந்தின் படியில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
தமிழகத்தில் சமீப காலமாக பள்ளி, கல்லூரி மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது குறித்த செய்திகள் வெளியாகி பேசு பொருளானது.
 
இந்த நிலையில் அருப்புக்கோட்டை அருகே பேருந்தின் படியில் இருந்து விழுந்த 10 ஆம் வகுப்பு  மாணவி ஒருவர் படுகாயங்களுடன் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த  நிலையில் இன்று உயிரிழந்தார்.
 
பேருந்தில் கூட்ட அதிகமாக இருந்த காரணத்தால் மாணவர்கள் நிறைய பேர் படியில் தொங்கிக் கொண்டு சென்றதாகவும் தகவல் வெளியாகிறது. 
 
இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்