தற்கொலைக்கு முயன்ற குடும்பத்தை அதிரடியாக மீட்ட போலீஸ்காரர் ...

Webdunia
வெள்ளி, 3 மே 2019 (17:57 IST)
கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் தனியார் தங்கும் விடுதியில் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். அப்போது அவர்களை பத்திரமாக மீட்ட போலிஸாரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் என்ற பகுதியில் வசித்து வந்தவர் ஸ்ரீநாத், இவர் தனது மனைவி சுஸ்ராஜ் மற்றும் 2 வயது மகன் ஆகியோருடன் பழனி வந்துள்ளார்.
 
பழனிமலை அடிவாரத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் வாடகைக்கு ரூம் எடுத்து தங்கியுள்ளனர்.  பின்னர் மலை கோவிலுக்குச் சென்ற ஸ்ரீதர் குடும்பம் தங்கள் உறவினருக்கு போன் செய்து இனி நாங்கள் ஊருக்குத் திரும்ப வரமாட்டோம் என்று கூறியுள்ளனர்.
 
அதன்பிறகு உறவினர்கள் ஸ்ரீநாத்தின் தொலைபேசியில் அழைத்தபோது செல்போன் ஸ்விட்ஸ் ஆப் செய்துள்ளார்.
 
இதனையடுத்து கேரள காவல்துறையினர்  மூலமாக பழனி காவல்துறைக்கு தொடர்பு  கொண்டு ஸ்ரீநாத் குடும்பத்தை காப்பாற்றும்படி கூறியுள்ளனர்.
 
பழனி போலிஸார் ஓரு தனிப்படை அமைத்து பழனியில் உள்ள அனைத்து தனியார் விடுதிகளிலும் தேடியுள்ளனர்.கடைசியாக பழனி அடிவாரத்தில் உள்ள ஒரு தனியர்  விடுதியில் அவர்கள் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.பின்னர் ஸ்ரீநாத் குடும்பத்துடன் மீட்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
 
இந்நிலையில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 பேரின் உயிரை காப்பாற்றியதற்காக டிஎஸ்பி விவேகானந்தன் மற்றும் செந்தில்குமாரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்