தேமுதிக அலுவலகத்தின் மீது கல்லெறிந்தவர் ஒரு மனநோயாளி

Webdunia
செவ்வாய், 26 ஏப்ரல் 2016 (10:13 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகம் மீது கல்லெறிந்தவர் போலீசாரிடம் பிடிபட்டுள்ளார். அவர் ஒரு மனநோயாளி என்று தெரியவந்துள்ளது.


 

 
சென்னை கோயம்பேடு 100 அடி சாலையில் தேமுதிக தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. அந்த கட்டிடத்தின் முகப்பு கண்ணாடிகள் மீது, கடந்த 21ஆம் தேதி அன்று இரவு, யாரோ மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் கண்ணாடி உடைந்து நொறுங்கியது.
 
இதுபற்றி அளிக்கப்பட்ட புகாரில் பேரில் போலீசார் விசாரணை செய்து வந்தனர். சாலையில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில், ஒரு நபர் கல் வீசும் காட்சி பதிவாகியிருந்தது. எனவே அந்த நபரை போலீசார் தேடி வந்தனர்.
 
இந்நிலையில், அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக சுற்றித் திரிந்த ஒரு நபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். கேமராவில் பதிவாகியிருந்த நபரின் உருவத்துடன் அவரின் உருவம் ஒத்துப்போனது. 
 
அவரிடம் நடத்திய விசாரனையில், அவர் திருக்கோவிலூர், பழஞ்சுரை பகுதியை சேர்ந்த சதீஷ்குமார்(34) என்பது தெரிய வந்துள்ளது. ஆனால் அவரின் நடவடிக்கை அவர் ஒரு மனநலம் சரியில்லாதவர் போல் தெரிந்தது.
 
இதனால், போலீசார் அவரை மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தனர். அவர் மனநோயோளிதான் என்று மருத்துவர்கள் சான்றிதழ் அளித்துள்ளனர்.
 
அதைத் தொடர்ந்து அவர் அந்த மருத்துவமனையிலேயே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
 
இதன்மூலம், அரசியல் கட்சியை சேர்ந்த எவரும், தேமுதிக அலுவலகம் மீது கல் வீசவில்லை என்று தெரிய வந்துள்ளது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்