கோழியை கடித்த நாயின் உரிமையாளரை கொன்ற நபர் !

Webdunia
வியாழன், 8 செப்டம்பர் 2022 (15:08 IST)
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காமராஜர் நகரில் வசிப்பவர் விஜயன். இவர் மகன் விஷ்ணு(26).   இவர் தன் வீட்டில் நாய் வளர்த்து வருகிறார்.

இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த முத்தன் என்பவர் வசித்து வரும் நிலையில், அவரத் நாய்  கடித்து வைத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து முத்தன் சென்று விஷ்ணுவிடம் போய் கேட்டுள்ளார்.அப்போது,  கோபம் அடைந்த முத்து என் கோழியை உன் நாய்தான் கடித்தது என்று கூறி தான் மறைத்து வைத்திருந்த  கத்தியால் விஷ்ணுவை சரமாரியாகக் குத்தினார்.

இதில், பலத்த காயம் அடைந்து கீழே சரிந்து விழுந்த விஷ்ணுவை அருகில் உள்ளோர் மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.  ஆனால், சிகிச்சை பலனின்றி விஷ்ணு உயிரிழந்துவிட்டார்.  இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்