போலீஸார் முன் டான்ஸ் ஆடிய பெண்!

Webdunia
வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (22:52 IST)
தமிழகத்தில் கொரோனா முதல் அலையைத் தொடர்ந்து தற்போது கொரொனா தொற்றின் 2 வது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. செப்டம்பரில் 3 வது அலை பரவும் அபாயமுள்ளது என மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

இந்தக் கொரொனா தொற்றைக் குறைக்க தடுப்பூசியுடன், சமூக இடைவெளி, மாஸ்க் அணியுடன் போன்ற வழிமுறைகளைக் கையாள வேண்டும் என அரசு கூறியுள்ளது. பொது இடங்களில் மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்நிலையில், சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் மாஸ்ட் அணியாத பெண்ணுக்கு போலீஸார் அபராதம் விதித்தனர். அப்போது, போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அப்பெண், சூர்யாவின் தானா  சேர்ந்த கூட்டம் படத்தில் இடம்பெற்ற சொடக்கு மேல சொடக்கு போடுது என்ற பாடலுகு அதே பாணியில் நடனம் ஆடி. கை நீட்டிப் பேசினார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்