தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை மேம்பாலம்: அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (18:47 IST)
சென்னை தேனாம்பேட்டை மற்றும் சைதாப்பேட்டை இடையே உயர்மட்ட சாலை அமைக்கப்படும் என்று சட்டமன்றத்தில் அமைச்சர் எ.வ.வேலு அறிவித்துள்ளார் 
 
சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை ஐந்து முக்கிய சிக்னல் இருப்பதால் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி உள்ளன 
 
இதனை தவிர்க்கும் வகையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உயர்மட்ட சாலை அமைக்கப்படும் என்று எ.வ.வேலு தெரிவித்தார்.
 
மேலும் இதற்காக 475 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார் .
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்