விரைவில் ஓடிடி தளங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய அமைச்சர் உறுதி!

Webdunia
செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (10:55 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தபோது திரைப்படங்கள் கிட்டத்தட்ட அனைத்துமே ஓடிடி தளத்தில்தான் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது
 
தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டு 100 சதவீத பார்வையாளர்களும் அனுமதிக்கப்பட்ட நிலையிலும் ஒரு சில திரைப்படங்கள் இன்னும் ஓடிடிதான் திரையிடப்பட்டு வருகின்றன. இதனால் விநியோகஸ்தர்கள் திரையரங்கு உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன
 
இந்த நிலையில் ஏற்கனவே மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்கள் ஓடிடி தளங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என்று கூறியிருந்த நிலையில் இன்று மாநிலங்களவையில் அவர் மீண்டும் இது குறித்து கூறியுள்ளார்
 
ஓடிடி தளங்களை கட்டுப்படுத்த வழி காட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அந்த வழிகாட்டி நெறிமுறைகளின்படி ஓடிடியில் திரைப்படங்கள் வெளியிடப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்
 
இதனால் தயாரிப்பாளர்கள் சற்று அதிர்ச்சி அடைந்தாலும் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. ஓடிடியில் திரைப்படம் வெளியாவதற்கு ஒரு சில கட்டுப்பாடுகளை விதித்தால் தயாரிப்பாளர்களுக்கு சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்