கொரோனா தொற்றில் தமிழகம் இன்னும் 2ஆம் நிலையில்தான் இருக்கிறது - சுகாதாரத்துறை செயலாளர்

Webdunia
வெள்ளி, 3 ஏப்ரல் 2020 (18:14 IST)
தமிழகத்தில் 234 பேருக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தமிழக அரசு  மக்கள் நடமாட்டத்தைக் குறைக்க பல நடவடிக்கைகளை எடுத்துவந்த நிலையில் இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 102 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. எனவே தற்போது தமிழகத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதில், முக்கியமாக 3684 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில், 411 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இன்னும் 484 பேரின் சோதனை முடிவுகள் வெளிவரவில்லை எனவும், 7 பேர் குணமடைந்து வீட்டுக்குச் சென்றுவிட்டதாகவும், 1590 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுதவிர, ஈரோடு மாவட்டத்தில் 95,692 பேர் ஆயிரம் பேர் கண்காணிப்பில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கதிரவன் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தற்போது தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, கொரொனா பாதித்தவர்களின் உடல்நிலை ஸ்திரமாக உள்ளது. யாரும் அச்சப்பட வேண்டாம். இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 102 பேரில் 100 பேர் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் என பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா தொற்றில் தமிழகம் இன்னும் இரண்டாம் நிலையில்தான் இருக்கிறது. கொரோனா பரவுவதை தடுக்க தமிழகம் முழுவதும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது . கோவை ஈஷா நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது என சுகாதாரத்துறைஎன தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்