ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்ட மசோதாக்களுக்கு எதிராக தமிழக அரசு சட்டம்ன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்துள்ளது.
மத்திய அரசு கடந்த ஆண்டு வேளான் சட்ட திருத்த மசோதாக்களைக் கொண்டு வந்தது. இது விவசாயிகளுக்கு எதிராகவும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதராவாகவும் இருப்பதாகவும் விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். டெல்லியில் பஞ்சாப் விவசாயிகள் 6 மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடந்துவந்தாலும் இன்னமும் தீர்வு காணப்படவில்லை.
இந்நிலையி இன்று சட்டசபையில் வேளாண் மசோதாக்களுக்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தின் போது அதிமுக மற்றும் பாஜக கட்சியைச் சேர்ந்தவர்கள் வெளிநடப்பு செய்தனர்.