ஜல்லிக்கட்டு வெறும் பொழுதுபோக்கு அல்ல! – உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு காரச்சார வாதம்!

Webdunia
வியாழன், 1 டிசம்பர் 2022 (16:05 IST)
ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளில் தமிழக அரசு தீவிரமாக வாதம் செய்துள்ளது.

தமிழ்நாட்டில் பாரம்பரியமாக பல ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வரும் நிலையில் 2017ல் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து மக்கள் வீதிகளில் போராட்டம் நடத்திய நிலையில் மீண்டும் வெற்றிகரமாக ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.

இந்நிலையில் பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இதுதொடர்பாக இன்று உச்சநீதிமன்றத்தில் விளக்கமளித்த தமிழ்நாடு அரசு “ஜல்லிக்கட்டு வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல. இதில் பங்கேற்கும் மற்றும் வெற்றி பெறும் காளைகளின் சந்தை மதிப்பு உயரும். பாரம்பரியம், கலாச்சாரத்துக்காக நடக்கும் இந்த போட்டிகள் பொழுதுபோக்கின் ஒரு பகுதியாக உள்ளது. தாங்கள் வளர்க்கும் காளைகளுக்கு துன்பம் விளைவிக்க யாரும் விரும்புவதில்லை” என பதிலளித்துள்ளது.

பொங்கல் நெருங்கி வரும் நிலையில் உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு குறித்து வழக்குத் தொடரப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்