ஊரடங்கு மேலும் நீட்டிப்பு; 3 வகையாக பிரித்து தளர்வுகள்! – தமிழக அரசு அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 20 ஜூன் 2021 (13:04 IST)
தமிழகத்தின் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்றுடன் முடிவடையும் நிலையில் அடுத்தக்கட்ட ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் குறித்து தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இன்றுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில் ஜூன் 28 வரை அடுத்தக்கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. அதன்படி தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளன.

வகை 1 – கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை மாவட்டங்கள்.

வகை 2 – அரியலூர், கடலூர், தருமபுரி உள்ளிட்ட வகை 1 மற்றும் வகை 3ல் சேராத 23 மாவட்டங்கள்

வகை 3 – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள்.
இதில் வகை 1ல் உள்ள 11 மாவட்டங்களுக்கும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளோடு ஊரடங்கு நீடிக்கும்.

வகை 2 மற்றும் 3ல் உள்ள மாவட்டங்களில் ஏற்கனவே உள்ள தளர்வுகளோடு, பூக்கடை, காய்கறி, பழ கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரையிலும், உணவகங்கள், இனிப்பு கடைகள், பேக்கரி மற்றும் மற்ற கடைகள் இரவு 9 மணி வரையிலும் செயல்பட அனுமதி

அரசின் முக்கிய துறை அலுவலகங்கள் 100% பணியாளர்களுடனும், மற்ற அரசு அலுவலகங்கள் 50% பணியாளர்களுடனும் இயங்கலாம்

பள்ளி, கல்லூரிகளில் அட்மிசன் பணிகள் தொடர்பான செயல்பாடுகளுக்கு அனுமதி
சென்னை. திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு மட்டும் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி!

வாகன விற்பனை நிலையங்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்க அனுமதி!

இ-பாஸ் பதிவுடன் வாடகை வாகனங்கள் இயங்க அனுமதி மேலும் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்