தமிழக அரசின் நடவடிக்கையை பொறுத்திருந்து பாருங்கள்: பன்னீர்செல்வம் அறிவிப்பு!!

Webdunia
வியாழன், 19 ஜனவரி 2017 (13:13 IST)
ஜல்லிக்கட்டு போராட்டம் வலுப்பெற்று இருக்கும் நிலையில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்து பேசினார்.


 
 
மோடியை சந்தித்த பின்னர், பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் முடிவுக்கு மத்திய அரசு துணை நிற்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளதாக தெரிவித்தார்.
 
பிரதமரை நேரில் சந்தித்து, ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டுவர வேண்டும், வர்தா புயல் நிவாரணம் மற்றும் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளை முன் வைத்ததாகவும் தெரிவித்தார்.
 
மேலும், ஜல்லிக்கட்டு குறித்து கருத்து பிரதமர் தமிழர்களின் கலாச்சாரமான ஜல்லிக்கட்டு பாரட்டத்தக்கது என்றும், தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்துள்ளார் என தெரிவித்தார்.
 
மேலும், ஜல்லிக்கட்டு தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கையை பொருத்திருந்து பார்க்கும்மாரு கூறினார்.
 
அடுத்த கட்டுரையில்