பணமும் பிணமும் தான் அதிமுக அரசியல்: தமிழிசை சீற்றம்!!

Webdunia
ஞாயிறு, 9 ஏப்ரல் 2017 (14:58 IST)
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகவின் இரு அணிகளும் பணத்தையும், பிணத்தையும் வைத்து அரசியல் செய்கின்றனர் என்று தமிழிசை குற்றம்சாட்டி உள்ளார்.


 
 
வரும் 12 ஆம் தேதி ஆர்கே நகர் தொகுதிக்கு  இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அதிமுகவின் இரு அணிகளும், திமுகவும் போட்டி போட்டு கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
இந்நிலையில் தினகரன் தரப்பினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க படுகிறது என தெரியவந்து அதற்கான ஆதாரங்களும் வெளியாகி உள்ளன. 
 
மறுபுறம் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதை வெளிப்படுத்தும் வகையில் ஜெயலலிதாவின் சவப்பெட்டி போன்று மாதிரியை தயாரித்து ஓபிஎஸ் அணியினர் பிரசாரம் செய்தனர். 
 
அதேபோல் பாஜக வேட்பாளர் கங்கை அமரனை ஆதரித்து இன்று ஆர்.கே.நகரில் தமிழிசை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் அதிமுகவின் ஒரு அணியினர் பணத்தையும் பிணத்தையும் வைத்து அரசியல் நடத்துகின்றனர். இந்த இரு அணியினரும் ஜெயலலிதாவுக்கு துரோகம் இழைத்து வருகின்றனர். உண்மையான அதிமுக என்பது ஜெயலலிதா மறைவோடு மறைந்துவிட்டது என தமிழிசை பிரசாரத்தில் பேசினார்.
அடுத்த கட்டுரையில்