அடுத்த 3 நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்திற்கு மழை!

Webdunia
செவ்வாய், 1 மார்ச் 2022 (10:22 IST)
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. 

 
தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் தமிழகத்தில் மார்ச்  3 ஆம் தேதி 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னர் தகவல் தெரிவித்தது. 
 
இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. இதனிடையே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 3 நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வரும் 3 ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்