இந்த திட்டத்தில் அதிகபட்சமாக 50,000 முதல் ரூ.2 லட்சம் வரை 25 சதவீத மானியத்துடன் கடன் உதவி பெற முடியும் என்பதும் 5% வட்டி மற்றும் மானியம் வழங்குவதால் தொழில் வளர்ச்சிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பட 35 வயது இருக்க வேண்டும் என்றும் மாற.
படகு தயாரித்தல், சிற்ப வேலைப்பாடுகள், கல் சிலை வடித்தல், மண்பாண்டங்கள், சுடுமண் வேலைகள், கூடை முடைதல், கயிறு பின்னுதல், பொம்மைகள் தயாரித்தல் உள்ளிட்ட பல தொழில்களுக்கு கடன் உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த திட்டத்தில் பயன்பெற இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும், www.msmeonline.in.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்தால் விண்ணப்பம் பரிசீலனை செய்து மானியத்துடன் கூடிய கடன் உதவி கிடைக்கும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.