கனமழை எதிரொலி: இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

Mahendran

புதன், 11 டிசம்பர் 2024 (07:21 IST)
வங்ககடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வாக வலுப்பெற்றுள்ள நிலையில், தமிழகத்தில் பரவலாக இன்று கனமழை பெய்யும் என்று குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது என்பதை பார்த்தோம்.
 
இந்த நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று மயிலாடுதுறையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சித் தலைவர் மகாபாரதி அறிவித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில், மற்ற மாவட்டங்களில் வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று மாலை நிலவரப்படி தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கில் நகர்ந்து இலங்கை மற்றும் தமிழக கடற்கரைகளை நோக்கி நகரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
 
இது புயலாக மாறுவதற்கான வாய்ப்பு தற்போதைய நிலவரப்படி தெரியவில்லை என்று கூறும் வானிலை ஆய்வு மையம். ஆனால் அதே நேரத்தில், தமிழகத்தின் பல பகுதிகளிலும் புதுச்சேரியிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்