தமிழக எம்.பிக்களை பூனைகள் என கிண்டலடித்த சுப்பிரமணிய சுவாமி..

Webdunia
வெள்ளி, 13 ஜனவரி 2017 (12:41 IST)
டிவிட்டரில் ஜல்லிக்கட்டு தொடர்பாக ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, தமிழகத்திலிருந்து நீங்கள் தேர்வு செய்த அந்த 39 பூனைகளை கேளுங்கள் என அவர் கிண்டலடித்துள்ளார்.


 

 
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி ஜல்லிக்கட்டிற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். தனது டிவிட்டர் பக்கத்தில் பல சர்ச்சையாக கருத்துகளை அவர் கூறிவருகிறார். நீதிமன்றத்தின் தடையை மீறி  ஜல்லிக்கட்டு நடைபெற்றால், தமிழக அரசை கலைத்துவிட்டு, அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமுல்படுத்த வேண்டும் எனக்கூறினார். 
 
அதன்பின், தமிழ்நாட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட பொறுக்கிகள்தான் ஜல்லிக்கட்டு வேண்டும் என்கின்றனர் என்ற அர்த்தத்தில் ஒரு பதிவை செய்திருந்தார். தங்களின் பாரம்பரிய உரிமைக்காக போராடும் மக்களை ஒரு ஆளும் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பொறுக்கிகள் என தரக்குறைவான வார்த்தைகளை கூறி விமர்சித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு சமூகவலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
 
இந்நிலையில், அவருக்கு பதிலடி கொடுத்த ஒரு நெட்டிசன், ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக சட்டம் இயற்ற முடியாத நீங்கள் உங்கள் எம்.பி.பதவியை ராஜினாமா செய்யலாம்’ எனக் குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த சுப்பிரமணிய சுவாமி “நான் தமிழக மக்களால் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்படவில்லை. நீங்கள் தேர்வு செய்த அந்த 39 புஸி கேட் (பூனை)களை கேளுங்கள்’ என பதிலளித்துள்ளார். தமிழக எம்.பி.க்களை பூனைகள் என அவர் கிண்டலடித்து கருத்து தெரிவித்தது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்