வெட்டுக்கிளிகள் தமிழகத்தை அழித்த ஆதாரம் உண்டு! – பகீர் கிளப்பும் மதுரை எம்.பி

Webdunia
வெள்ளி, 29 மே 2020 (13:11 IST)
வட இந்தியாவில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு பதட்டத்தை கிளப்பியுள்ள நிலையில், தமிழகத்தில் வெட்டுக்கிளிகளால் அழிவு ஏற்பட்டதற்கு ஆதாரங்கள் உள்ளதாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

கொரோனாவிற்கு பிறகு இந்தியாவில் பகீர் கிளப்பும் விஷயமாக மாறியுள்ளது வெட்டுக்கிளிகள் தாக்குதல். பாகிஸ்தான் வழியாக இந்தியாவில் நுழைந்த வெட்டுக்கிளிகள் வடமேற்கு பகுதிகளான மத்திய பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. எனினும் இவை தமிழகத்திற்கு வர வாய்ப்பில்லை என தமிழக வேளாண் துறை தெரிவித்துள்ளது, எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

இந்நிலையில் வெட்டுக்கிளிகள் தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள வரலாற்று ஆய்வாளரும், மதுரை எம்.பியுமான சு.வெங்கடேசன் ” வாய்மொழி மரபின் வழியாகவும், வரலாற்று குறிப்புகள் மூலமாக தமிழகத்தில் வெட்டுக்கிளிகள் பெறும் அழிவை ஏற்படுத்தியதற்கான சான்று உள்ளது” என்று கூறியுள்ளார்.

மேலும் “தமிழகத்தில் வெட்டுக்கிளிகள் வரவே வராது என எடுத்துக்கொள்ளக் கூடாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சு.வெங்கடேசன் ‘காவல் கோட்டம்’ நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்