போலி நீட் மதிப்பெண் சான்றிதழ்: தந்தையுடன் மாணவி தலைமறைவு

Webdunia
வெள்ளி, 18 டிசம்பர் 2020 (13:46 IST)
மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வின்போது ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் போலி சான்றிதழ் அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டு அவர் மீதும் அவரது தந்தை மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
 
அதுமட்டுமின்றி அந்த மாணவிக்கு போலி சான்றிதழ் தயாரிக்க உதவிய கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளரையும் போலீஸ் தேடி வருகிறது என்பதும், அந்த கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் விரைவில் பிடிபடுவார் என்றும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் மாணவி கொடுத்த போலி சான்றிதழை தடயவியல் துறைக்கு அனுப்பி விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில் திடீரென அந்த மாணவியும் அவருடைய தந்தையும் தலைமறைவாகிவிட்டதாக தெரிகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இந்த நிலையில் போலி நீட் மதிப்பெண் ஒப்படைத்த மாணவி மற்றும் அவரது தந்தையை தேடும் பணியில் தற்போது காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்