கல்லூரி வாயிலில் மாணவர் கத்தியால் குத்திக் கொலை!

Webdunia
புதன், 26 ஜூன் 2019 (21:41 IST)
சென்னையை அடுத்துள்ள துரைப்பாக்கத்தில்  உறவுக்கார இளம்பெண்ணை காதலிக்க எதிர்ப்பி தெரிவித்து  ஒரு கல்லூரி வாயிலில் ஒரு இளம் பெண்ணின் சகோதரர் சக மாணவரை கத்தியால் குத்தியது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு பிரபல கேட்டரிங் காலேஜில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஷவன்குமார் மற்றும் ஹரிஜனா சண்முகா ஆகிய இருவரும் ஒரு வகுப்பில் படித்துவந்தனர். 
 
ஷவன்குமார் , ஷரிஜனா சண்முகாவின் உறவுக்கார பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். இதனை ஹரிஜனா எதிர்த்துள்ளார். 
 
இந்நிலையில் இன்று கல்லூரியை விட்டு வெளியே வரும் போது, ஹரிஜனா சண்முகா தன் கையில் வைத்திருந்த கத்தியால் குத்தியதில், ஷிவன்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சக மாணவரை கத்தியால் குத்திக் கொலை செய்த ஹரிஜன சண்முகாவை கைது செய்த போலீஸார், அவரிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்