வைகோவிடம் ஸ்டாலின் சுதாரிப்பாக இருக்க வேண்டும்: செல்லூர் ராஜூ

Webdunia
ஞாயிறு, 18 பிப்ரவரி 2018 (12:51 IST)
கடந்த சில நாட்களாகவே மு.க.ஸ்டாலினை முதலமைச்சர் ஆக்காமல் விடமாட்டேன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சூளுரைத்து வருகிறார். ஸ்டாலினை முதலமைச்சராக்க இவர் ஏன் தனியாக அரசியல் கட்சி நடத்த வேண்டும், அதற்கு பதிலாக மீண்டும் திமுகவில் இணைந்து விடலாமே என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் வைகோவின் இந்த கருத்து குறித்து கூறிய அமைச்சர் செல்லூர் ராஜூ, 'எங்கள் மண்ணின் மைந்தர் விஜயகாந்தை முதலமைச்சர் ஆக்குவதாக கூறி அவரை படுபாதாளத்தில் தள்ளிவிட்டவர் வைகோ. அதே நிலைமை தற்போது மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கும் வந்துவிடக்கூடாது.
 
எனவே எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்கள் வைகோவிடம் சுதாரிப்பாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இருப்பினும் எங்களை பொருத்தவரையில் திமுக மட்டுமே எங்களது ஒரே எதிரி என்று கூறியுள்ளார். செல்லூர் ராஜூ அவர்களின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்