200 இல்ல, 234ம் நமக்குத்தான்: ஸ்டாலின்

Webdunia
வியாழன், 25 மார்ச் 2021 (20:23 IST)
திமுக தலைவர் கடந்த சில நாட்களாக தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார் என்பதும் தமிழகத்தில் 200 தொகுதிகள் வரை திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றும் அவர் கூறி வந்தார் என்பதும் தெரிந்ததே
 
அவர் கூறியது போலவே 170 முதல் 180 தொகுதிகள் வரை திமுக வெற்றி பெறும் என்று கிட்டத்தட்ட அனைத்து கருத்துக்கணிப்புகளும் கூறி வருகின்றன. இந்த நிலையில் இன்று தேர்தல் பிரச்சாரம் செய்த முக ஸ்டாலின் தமிழகத்தில் 200 அல்ல 234 தொகுதிகள் நமக்கு தான் என்று கூறியுள்ளார்
 
தமிழகத்தில் இதுவரை நடந்த தேர்தலில் 234 தொகுதிகளையும் ஒரே கட்சி அல்லது கூட்டணி வென்றது இல்லை என்பது வரலாறு. கடந்த 1991ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக கூட்டணி 225 தொகுதிகளில் வெற்றி பெற்றதே இதுவரை அதிகமாக வெற்றி பெற்ற வரலாறு. இருப்பினும் முக ஸ்டாலின் கூறியது போல் இந்த தேர்தலில் திமுக 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்