பாடகர் எஸ்பிபி-யின் இறுதிப்பயணம்: முதல்வரிடம் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

Webdunia
வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (19:34 IST)
பிரபல பாடகர் எஸ்பிபி மறைவு குறித்து ஏற்கனவே தனது டுவிட்டர் பக்கத்தில் டுவிட் ஒன்றை திமுக தலைவர் முக ஸ்டாலின் பதிவு செய்து இருந்தார் என்ற செய்தியைப் பார்த்தோம். இந்த நிலையில் தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அந்த கோரிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
 
தமிழர்களின் நெஞ்சில் நிறைந்தவராக அரை நூற்றாண்டு காலம் புகழோடு விளங்கி, பத்மஸ்ரீ-பத்மபூஷண் விருதுகள் பெற்ற எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்களின் இறுதிப்பயணம் உலகெங்கிலும் வாழும் ரசிகர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் முழு அரசு மரியாதையுடன் நடைபெற தமிழக முதல்வர் ஆவன செய்ய வேண்டும்! என்று கோரிக்கை வைத்துள்ளார்.
 
முன்னதாக முக ஸ்டாலின் தனது டுவிட்டரில் எஸ்பிபி மறைவு குறித்து கூறியதாவது: பாடும் நிலா எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்களின் மறைவை கோடிக்கணக்கான ரசிகர்கள் தம் சொந்தக் குடும்பத்தில் ஏற்பட்ட இழப்பாகவே கருதுகிறோம். மன அழுத்தத்துக்கு இயற்கையான மாமருந்து அவர்! தம்பி சரணுக்கும் குடும்பத்தினருக்கும் எனது ஆறுதல்! இனிய குரலால் என்றென்றும் உயிர்த்திருப்பார் எஸ்.பி.பி!
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்