ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்: 22 வயது இளம்பெண் போட்டியின்றி தேர்வு!

வெள்ளி, 22 அக்டோபர் 2021 (11:24 IST)
ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்: 22 வயது இளம்பெண் போட்டியின்றி தேர்வு!
சமீபத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது என்பதும் இந்த தேர்தலில் திமுக வரலாறு காணாத வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஊராட்சி தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து தற்போது ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கான மறைமுக தேர்வு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் நெல்லை மாவட்டம் மானூர் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவராக 22 வயதான இளம் பொறியியல் பட்டதாரி ஸ்ரீலேகா என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். திமுகவைச் சேர்ந்த ஸ்ரீலேகா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
மானூர் ஒன்றியத்தின் கீழ் நாற்பத்தி ஒரு கிராம ஊராட்சிகள் உள்ளன என்பதும் அந்த ஊராட்சிகள் அனைத்திற்கும் ஸ்ரீலேகா தான் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 22 வயதான இளம் பொறியியல் பட்டதாரி ஸ்ரீலேகா ஊராட்சி ஒன்றியக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்