வைகோ மகனுக்கு பொறுப்பு: எதிர்ப்பு தெரிவித்து முக்கிய பிரமுகர் ராஜினாமா!

வியாழன், 21 அக்டோபர் 2021 (09:34 IST)
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் மகன் துரை வையாபுரி அவர்கள் நேற்று மதிமுகவின் புதிய பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை அடுத்து மதிமுகவின் முக்கிய பிரமுகர் எதிர்ப்பு தெரிவித்து ராஜினாமா செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
மதிமுகவின் புதிய பொதுச் செயலாளராக நேற்று ரகசிய வாக்கெடுப்பு நடந்த நிலையில் பெரும்பாலானோர் வாக்குகளை பெற்று துரை வையாபுரி புதிய பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்
 
இதற்கு கட்சியிலுள்ள பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்த நிலையில் ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. வாரிசு அரசியலை ஆரம்பம் முதலே எதிர்த்து வந்த வைகோ தனது வாரிசை கட்சிக்கு கொண்டு வந்து உள்ளதை ஜீரணிக்க முடியாது என்று ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்
 
இந்த நிலையில் மதிமுக இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் என்பவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்