சிறப்பு சட்டம் விரைவாக கொண்டு வரப்படவேண்டும்: அண்ணாமலை கோரிக்கை

Webdunia
ஞாயிறு, 21 நவம்பர் 2021 (10:19 IST)
பணி நேரத்தில் காவல்துறை அதிகாரிகள் கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது என்றும் காவல்துறை அதிகாரிகளை காப்பதற்கு சிறப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார் 
 
இன்று திருச்சி நவல்பட்டு சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் அவர்கள் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் கூறியபோது திருச்சி நவல்பட்டு சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் கொல்லப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது என்றும் கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் இருக்கும் போலீசாருடன் பணியாற்றி வருகின்றனர் என்றும் பணி நேரத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு ஆக சிறப்பு சட்டம் விரைவாக கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
பாஜக தலைவர் அண்ணாமலையின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்று சிறப்பு சட்டத்தை கொண்டு வருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்