சசிகலாவுக்கு டிவி தவிர வேறு எதுவும் கொடுக்கவில்லை: டி.ஜி. தகவல்

Webdunia
வியாழன், 2 மார்ச் 2017 (11:42 IST)
சசிகலாவுக்கு சிறையில் டிவி கொடுக்கப்பட்டுள்ளதாம். அதைத் தவிர வேறு எந்த வசதியும் வழங்கவில்லை என சிறைத்துறை டிஜி தெரிவித்துள்ளார்.


 

 
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. பெங்களூர் பரப்பன அக்ரஹாரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் சசிகலா தனக்கு ஏசி, உணவு உள்ளிட பல வசதிகள் கோரினார். ஆனால் நீதிமன்றம் அதை மறுத்துவிட்டது.
 
தற்போது சிறையில் இருக்கும் சசிகலாவிற்கு வழங்கப்பட்டுள்ள வசதி குறித்து வழக்கறிஞர் எம்.பி. ராஜவேலாயுதம் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்டார். அதற்கு சிறைத்துறை டிஜி பதல் அளித்துள்ளார்.
 
அதில்,
 
சசிகலாவுக்கு டிவியை தவிர வேறு எந்த சிறப்பு வசதியும் வழங்கவில்லை. சசிகலா ஒரு கட்சியின் தலைவி என்பதால் அவருக்கு தனியாக ஒரு டிவி கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் தினகரனை சந்தித்து பேச 40 நிமிடம் அனுமதிக்கப்பட்டது.
 
சசிகலா தனக்கு சில குறிப்பிட்ட வசதிகளை செய்து கொடுக்குமாறு கேட்டார். ஆனால் அவை அனைத்தும் வழங்கப்படவில்லை. 
 
இவ்வாறு அவர் பதில் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
அடுத்த கட்டுரையில்