வருத்தம் தெரிவிக்காவிட்டால் நடவடிக்கை: அறப்போர் இயக்கத்திற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை..!

Webdunia
வெள்ளி, 10 மார்ச் 2023 (17:07 IST)
ஆயிரம் கோடி மதிப்பிலான டாஸ்மார்க் பாக்ஸ் டென்டர்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் டாஸ்மார்க் குடோனில் இருந்து கடைகளுக்கு எடுத்துச் செல்லும் போக்குவரத்து டெண்டல் 43 மண்டல வாரியாக பிரிக்கப்பட்டுள்ளது என்றும் ஆயிரம் கோடிக்கு மேல் மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் இந்த டெண்டர் ஈ டெண்டர் போடாமல் அமைச்சர் செந்தில் பாலாஜி தனக்கு வேண்டியவர்களுக்கு இந்த டெண்டரை கொடுத்திருக்கிறார் என்றும் அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு கூறுகின்றது. 
 
இந்த நிலையில் தவறை உணர்ந்து குற்றச்சாட்டை அறப்போர் இயக்கம் வருத்தம் தெரிவிக்காவிட்டால் சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். 
 
இந்த டெண்டரை பொருத்தவரை டாஸ்மாக் தொடங்கப்பட்டதிலிருந்து எந்த நடைமுறை பின்பற்றப்படுகிறதோ அதே நடைமுறைதான் இப்போதும் பின்பற்றப்படுகிறது என்றும் உண்மைக்கு புறம்பான தகவல்களை அறப்போர் இயக்கம் வெளியிட்டு இருக்கிறது என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி  தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்