2026 தேர்தலில் அனைத்து கட்சிகளும் தனித்துப் போட்டியிட வேண்டும்: செல்லூர் ராஜூ

Mahendran
புதன், 19 ஜூன் 2024 (12:37 IST)
2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் தங்களது பலத்தை நிரூபிக்க தனித்து போட்டியிட வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியிருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழக தேர்தலைப் பொருத்தவரை அதிமுக திமுக ஆகிய இரண்டு பெரிய கட்சிகளுமே கூட்டணி வைத்து தான் போட்டியிடுகின்றன என்பதும் ஜெயலலிதா மட்டுமே ஒரே ஒருமுறை தனித்து அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
குறிப்பாக திமுக இதுவரை கூட்டணி இல்லாமல் போட்டியிட்டதாக வரலாறு இல்லை என்ற நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற மமதையில் திமுக இருக்கிறது என்றும் கூட்டணி கட்சிகள் ஆதரவு இல்லாமல் திமுக தேர்தலில் தனித்து போட்டியிட தயாரா என்றும் கேள்வி எழுப்பினார்.
 
அதேபோல் உதயசூரியன் சின்னத்தில் இல்லாமல் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிட தயாரா என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிட்டு தங்களுடைய பெருன்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
மேலும் காங்கிரஸ் கட்சியை கட்டி காக்க ராகுல் காந்தி விடா முயற்சி எடுத்து வருகிறார் என்றும், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்