சீமான் கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் புதிய கட்சியா? பரபரப்பு தகவல்..!

Siva

திங்கள், 12 ஆகஸ்ட் 2024 (07:26 IST)
சீமானின் நாம் தமிழர் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் தனி கட்சி ஆரம்பிக்க போவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில மாதங்களாகவே சீமான் கட்சியில் உள்கட்சி குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் சிலர் ராஜினாமா செய்யப்பட்டும், சிலர் வெளியேற்றப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதுமட்டுமின்றி மேலும் சில தலைவர்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சீமான் கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் மற்றும் வெளியேற்றப்பட்டவர்கள், அதிருப்தியில் இருப்பவர்கள் ஆகியோர்கள் ஒன்றாக சேர்ந்து புதிய கட்சி ஆரம்பிக்க இருப்பதாகவும் அந்த கட்சிக்கான ஆரம்பகட்ட நடவடிக்கை தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக சீமான் கட்சிக்கு நிதி வழங்குபவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் புதிய கட்சி ஆரம்பித்தால் அதற்கும் நிதி கிடைக்கும் என்றும் கூறப்படுவது சீமான் தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

சீமான் கட்சி இப்போதுதான் ஓரளவுக்கு மக்களின் அபிமானத்தை பெற்று வாக்கு சதவீதம் அதிகரித்து வரும் நிலையில் அந்த கட்சி உடையும் நிலை ஏற்படுவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்