இந்த நிலையில் சமீபகாலமாக அமைதியாக இருந்து வந்த விஜயலட்சுமி, தன்னை பற்றி சீமான் பேசியது தொடர்பாக மோசமான வார்த்தையால் விமர்சித்து மீண்டும் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் எதற்காக என்னையும் திமுகவையும் இணைத்து பேசுறீங்க, திமுக, கலைஞர் மற்றும் என்னையே தவறாக பேசுவதை விட அரசியலில் வேறு எதுவும் உங்களுக்கு தெரியாதா.?
என்னைய பற்றி பேசாதே என சொல்லியும் நீ என்னைய பற்றி எதற்காக பேசுகிறார். நான் அமைதியாக பெங்களூரில் இருக்கேன். என்னை பற்றியும் திமுகவை பற்றியும் தொடர்ந்து தவறாக பேசினால் 2026ஆம் ஆண்டும் தேர்தலில் தோல்வி தான் கிடைக்கும். இதோட நிப்பாட்டிக்கோ, கடைசியாக சொல்கிறேன்.
மின் கட்டண உயர்வை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய சீமான், நடிகை விஜயலட்சுமியை தனக்கு எதிராக தூண்டிவிட்டது திமுக என கூறியிருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தற்போது விஜயலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.