4 மாவட்டங்களில் 11 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்!- பள்ளிக் கல்வித்துறை

Webdunia
வியாழன், 7 டிசம்பர் 2023 (20:20 IST)
சென்னை வெள்ளத்தில் மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் நேரடியாக ஆய்வு செய்து வருகின்றனர். புயல் பதிப்பில் இருந்து சென்னை மீண்டு வருவதாக இன்று தமிழ் நாடு தலைமைச் செயலாளர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த நிலையில்  மிக்ஜாம் புயல் பாதிப்பு ஏற்படுத்த தொடங்கிய 4 ஆம் தேதி முதல் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டன.

இந்த நிலையில், சென்னையில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் (டிசம்பர் 8) விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் வரும் 11 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் வரும் 11 ஆம் தீதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்பாக தூய்மை, மின்  இணைப்பு உள்ளிட்ட முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என  உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்