தமிழக பள்ளிகளில் சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்பு: திடீர் அறிவிப்பு...!

Webdunia
புதன், 14 செப்டம்பர் 2022 (19:40 IST)
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் அரசு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பள்ளிகள் நடைபெறாத நிலையில் இந்த கல்வி ஆண்டு முதல் பள்ளிகள் முழுமையாக இயங்கி வருகிறது 
 
இந்த நிலையில் மாணவர்களின் கல்வி திறனை கருத்தில் கொண்டு பல்வேறு புதிய திட்டங்களை பள்ளி கல்வித்துறை அறிவித்து வருகிறது என்று பார்த்து வருகிறோம் 
 
அந்த வகையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சனிக்கிழமை வகுப்புகள் நடத்த சிறப்பு அனுமதி வழங்கப்பட்டதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. பொதுத் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் இந்த சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்