அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா முதலமைச்சர் ஜெயலலிதா தன்னை பதவி விலக வற்புறுத்துவதாகவும், அடித்ததாகவும் மாநிலங்களவையில் கூறினார்.
தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறிய சசிகலா புஷ்பா பாதுகாப்பு கேட்டு நீதிமன்றத்தில் மனு தக்கல் செய்திருந்தார். பின்னர் டெல்லி போலீசில் ஜெயலலிதா மீது புகார் அளித்தார். இப்படி அடித்தடுத்து அதிரடிகளில் இறங்கிய சசிகலா புஷ்பா விரைவில் கைது செய்யப்படுவார் என கூறப்படுகிறது.
ஏற்கனவே சசிகலா புஷ்பா மீது திருச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அதிமுக சார்பில், தன்னை தமிழக முதல்வர் தாக்கியதாக ஆதாரம் இல்லாமல் சொல்லியிருக்கிறார் மேலும் நாடாளுமன்றத்தில் தமிழக முதல்வரின் மாண்பை குறைக்கும் வகையில், திட்டமிட்டு அவதூறு பேசியுள்ளார். அதற்காக சசிகலா புஷ்பா மீது வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்கும்படி புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், நெடுஞ்சாலை துறையில் காண்ட்ராக்ட் பெற்று தருவதாக கூறி 20 லட்சம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு, இதுவரை ஒப்பந்தம் வாங்கித்தராததோடு, பணத்தை திருப்பி கேட்கும்போது கொலை மிரட்டல் விடுவதாக சசிகலா புஷ்பா மற்றும் அவரது கணவர் லிங்கேஸ்வர திலகன் மீது நெல்லை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அதிமுக கவுன்சிலர் வெள்ளைப் பாண்டியை சசிகலா புஷ்பாதான் கூலிப்படை மூலம் கொலை செய்தார் என்று அவரது மகள் பிரச்சனை கிளப்பினார். ஆதாரமாக சசிகலா புஷ்பாவின் செல்போன் உரையாடல்கள் உள்ளன என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் புகார் கொடுத்தார்.
அப்போது சசிகலா புஷ்பா செல்வாக்கில் இருந்ததால் அந்த வழக்கில் அவரை ஒன்றும் பண்ண முடியவில்லை. இப்போது அந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று வெள்ளைப்பாண்டியின் குடும்பத்தார் கோரிக்கை வைத்துள்ளார்கள் என தகவல்கள் வந்துள்ளன.
எனவே சசிகலா புஷ்பா விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சசிகலா புஷ்பா தமிழகம் வரும் பட்சத்தில் அவரது கைது நடவடிக்கை இருக்குமாம், எனவே தான் சசிகலா புஷ்பா, பாஜக, காங்கிரஸ் தலைவர்களை சந்திக்க அனுமதி கேட்டுள்ளார். அவர்களது ஆதரவை பெற்று தப்பிக்கலாம் என சசிகலா திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.