குறுக்கு வழியில் சசிகலா வரக்கூடாது - சசிகலா புஷ்பா நீதிமன்றத்தில் வழக்கு

Webdunia
வியாழன், 15 டிசம்பர் 2016 (12:14 IST)
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை பாதிப்பினால் கடந்த  5ம் தேதி மரணமடைந்தார்.


 

 
இந்நிலையில், அவரின் மறைவுக்கு பின் அவர் வகித்து வந்த பொதுச்செயலாளர் பதவியில் அவரின் நெருங்கிய தோழி சசிகலாவை அமர வைக்க பெரும்பாலான அதிமுகவினர் குரல் கொடுத்து வருகின்றனர். முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முதல் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மூத்த அமைச்சர்களும் சசிகலாவிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 
 
அதன் எதிரொலியாக தமிழகத்தின் பட இடங்களில் சசிகலாவிற்கு ஆதரவாக போஸ்டர்கள், பேனர்கள் என அதிமுகவினர் ஆட்டத்தை ஆரம்பித்து விட்டனர். ஆனால், ஒருபக்கம் பல அதிமுக தொண்டர்கள் சசிகலாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், அதிமுக தலைமையை பகைத்துக் கொண்ட மேலவை உறுப்பினர் சசிகலா புஷ்பா, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 
 
“அதிமுக தொண்டர்களின் விருப்பதிற்கு மாறாக குறுக்கு வழியில் அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு யாரும் தேர்வு செய்யப்படக் கூடாது” என அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். 
 
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. இந்த விவகாரம் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அடுத்த கட்டுரையில்