ஆர்.கே.நகர் தேர்தல் ; செக் வைத்த சசிகலா : சாதிப்பாரா தினகரன்?

Webdunia
வெள்ளி, 1 டிசம்பர் 2017 (13:52 IST)
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலைக்கு கிடைக்கும் வாக்குகளை அதிக ஓட்டுகள் வாங்க வேண்டும் என தினகரனுக்கு சசிகலா கட்டளையிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


 
ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரன் போட்டியிடுவதை சசிகலா குடும்பத்தினர் விரும்பவில்லை எனத்தெரிகிறது. ஏனெனில், கடந்த ஏப்ரல் மாதம் அதே தொகுதியில் தினகரன் போட்டியிட்டதால்தான், பதவி, இரட்டை இலை சின்னம் பறிபோனதோடு, ஐ.டி. சோதனை வரை வந்தது.
 
சமீபத்தில் சிறையில் சசிகலாவை தினகரன் சந்தித்து பேசிய போது, இரட்டை இலையை எதிர்த்து நீ போட்டியிடாதே என சசிகலா கூறியதாகவும் செய்தி வெளியானது. ஆனால், எடப்பாடி தரப்பிற்கு தனது பலத்தை காட்டியே ஆக வேண்டும் என்பதில் தினகரன் உறுதியாக இருக்கிறார்.
 
தான் சிறைக்கு செல்லும் முன்பு கொடுத்த விட்ட கட்சியை தினகரன் நாசம் செய்துவிட்டார் என்கிற கோபம் சசிகலாவிற்கு இருப்பதாய் கூறப்படுகிறது. எனவே, ஆர்.கே.நகரில் போட்டியிட்டால் இரட்டை இலைக்கு கிடைக்கும் வாக்குகளை விட குறைந்த பட்சம் 2 ஆயிரம் ஓட்டுகள் அதிகமாக நீ பெற வேண்டும் என சசிகலா செக் வைத்துள்ளாராம். 
 
எனவே, நெருக்கடியுடன் களம் இறங்கியுள்ளார் தினகரன். அவர் வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்