தமிழக முதல்வர் சசிகலா, தமிழக ஆளுநர் சு.சுவாமி?? என்னமா யோசிக்கிறாங்கயா அரசியல்ல!!

Webdunia
வெள்ளி, 10 பிப்ரவரி 2017 (15:13 IST)
சுப்ரமணியன் சுவாமி விரைவில் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சசிகலா முதல்வராக வேண்டும் என்று சு.சாமி கூறுகிறார் என செய்திகள் வெளியாகியுள்ளது.


 
 
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சசிகலா தமிழக முதல்வராக வேண்டும் என்று தொடர்ச்சியாக கருத்து கூறி வருகிறார் சுப்ரமணியன் சுவாமி. சசிகலா முதல்வரானால், அதன்பின் தமிழக ஆளுநராக சுப்ரமணியன் சுவாமி தான் நியமிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
 
இந்நிலையில், சுப்ரமணியன் சுவாமி தமிழகத்தில் நடக்கும் கலாட்டாக்களை மத்திய அரசு கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது என ட்விட் செய்தார்.
 
ஆளுநர் இரண்டு நாட்கள் வராமல் காலத்தை தட்டிகழித்ததற்கு ஆளுநரை குறை சொன்னார் சுப்ரமணியசாமி. அனைவரும் சசிகலாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் சசிகலாவிற்கு ஆதரவாகவே பதிவிட்டு வந்தார்.
 
இதற்கெல்லாம் சுப்ரமணியன் சுவாமிக்கும் சசிகலாவிற்கும் இடையே போடப்பட்ட ஒரு மெமரேண்டம் ஆப் அண்டர்ஸ்டேன்டிங் தான் காரணம் என கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்