சமஸ்கிருத திணிப்பு: மத்திய அரசை எச்சரிக்கும் கருணாநிதி

Webdunia
வெள்ளி, 10 ஜூன் 2016 (18:58 IST)
மத்திய அரசு பள்ளிகளில் சமஸ்கிருத மொழி கட்டாய பாடமாக சேர்க்க வேண்டும் என்ற மத்திய அரசின் முயற்சிக்கு திமுக தலைவர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.


 
 
இது குறித்து இன்று அறிக்கை வெளியிட்ட திமுக தலைவர் கருணாநிதி மத்தியில் பாரதிய ஜனதா அரசு அமைந்த பின்னர், ஹிந்தி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளை திணிக்கும் நடவடிக்கைகளில் திடீரென வேகம் அதிகரித்துள்ளது.
 
மொழி மற்றும் கலாசாரத்தை திணிக்கும் முயற்சிகள், நாட்டிற்கு பேராபத்தை ஏற்படுத்துவதுடன், அடிப்படை பிரச்னைகள் மீதான மக்களின் கவனத்தை திசை திருப்பி விடும் என்று கருணாநிதி தனது அறிக்கையில் எச்சரித்துள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்