ஸ்பைடர்மேன் போல் மாஸ்க்; நகைக்கடையை கொள்ளையடித்த மர்ம கும்பல்! – சேலத்தில் பரபரப்பு!

Webdunia
செவ்வாய், 3 நவம்பர் 2020 (09:35 IST)
சேலத்தில் ஸ்பைடர்மேன் போல மாஸ்க் அணிந்த கும்பல் நகைக்கடையை கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் சமீப காலமாக கொள்ளை சம்பவங்கள் ஹாலிவுட் பட லெவலுக்கு நடந்து வருவது அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய திருச்சி லலிதா ஜுவல்லரி திருட்டின் போது கொள்ளையர்கள் வித்தியாசமான மாஸ்க் அணிந்து வந்து கொள்ளையடித்தனர். இதுகுறித்த விசாரணையில் அவர்கள் பிரபலமான பணம் திருட்டு குறித்த வெப் சிரிஸை பார்த்து அதுபோலவே மாஸ்க் அணிந்து கொள்ளையடித்ததாக பேசிக் கொள்ளப்பட்டது.

தற்போது அதுபோன்ற சம்பவம் ஒன்று சேலத்திலும் நடந்துள்ளது. சேலத்தின் நகர் பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றி பூட்டை உடைத்து உள்ளே சென்ற திருடர்கள் 10 சவரன் நகை மற்றும் 10 கிலோ வெள்ளிப்பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்துள்ளனர். அதில் திருடர்கள் ஹாலிவுட் சூப்பர்ஹீரோ ஸ்பைடர்மேன் போல மாஸ்க் அணிந்து வந்து திருடியது தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் சேலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்