தமிழக அரசியல் கட்சிகள் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வேளையில், அதிமுக தனது கட்சி நிர்வாகியை நீக்கியுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில், சேலம் மாவட்ட செயலாளர் எம்.கே., செல்வராஜூ அப்பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார். அவருக்கு பதில், அந்தப் பொறுப்பில், சேலம் மாநகர மேயர் சவுண்டப்பன் நியமிக்கப்படுகிறார். மேலும், சேலம் மாவட்ட அவை தலைவராக வி. பன்னீர் செல்வம் எம்பி நியமிக்கப்படுகிறார் என தெரிவித்துள்ளார்.
உலக அரசியல் வரலாற்றில், ஒரு கட்சியில் இருந்து அதிக உறுப்பினர்களை நீக்கி சாதனை படைத்துள்ளது அதிமுக மட்டுமே என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.